Monday, 2 January 2012

பாடல் விமர்சனம் 2

நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். கண்களை மூடி ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். இந்த உலகத்தில் பெண்களே இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்?
கடவுள் முதன் முதலில் ஒரு எலியைப் படைத்தாராம், எலி அங்கும் இங்கும் ஓடி தானியங்களை எல்லாம் நாஸ்தி பண்ணியதாம், கடவுள் பார்த்தாராம், எலியை அடக்க பூனையைப் படைத்தாராம்,  பூனை தன்னை மிஞ்ச ஆள் இல்லை என்ற ஆணவத்தில் எலியைக் கொல்ல, பூனையை அடக்க நாயைப் படைத்தாராம், நாயை தன் கட்டுப் பாட்டில் வைக்க மனிதனைப் படைத்தாராம். மனிதன் அறிவால் கடவுளையே மிஞ்சும் அளவிற்கு ஆணவத்தில் நடக்க, கடவுள், மனிதன் அறிவு மயங்கி, ஒரு போதையோடு அலையத்தான் பெண்ணைப் படைத்தாராம்.
  நான் சொல்றது ரீல்னு நெனைக்காதீங்க, நீங்க நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை இதுதான், ஒரு டெஸ்ட் வேணுனா வச்சுப்போமா? வாழ்க்கைல எல்லாருக்கும் முன்னுக்கு வரணுன்னு ஆசை இருக்கு, பிட்சைக்காரன் கூட அடுத்தபடிக்கு முன்னேற ஆசையாத்தான் இருக்கான். சரி சரி டெஸ்ட்க்கு வரேன். உங்ககிட்ட வாழ்க்கையில் முன்னேற டிப்ஸ் தர ஒரு சி டி யும், ஒரு செக்ஸ் பட சி டி யும் இருந்தால் எதை முதலில் நூறு சதவிகிதம் ஆர்வத்தோடு பார்ப்பீர்கள்.  
இந்த கேள்விக்கு மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள், ஒரு அழகான பெண் உங்களை உடலுறவு கொள்ள அழைத்தால் செல்வீர்களா இல்லையா? நீங்கள் திருமணம் ஆனவர் என்றாலும் கூட. 
ஆண் எப்போதும் பெண்ணின் மீது போதையோடு அலைபவன்தான், அதற்கு பெயர் காதல், அன்பு , ஹார்மோன் தூண்டல் என என்ன வேண்டுமானாலும் சொன்னாலும் சரி. கூகுளில் போய் beauty  னு இமேசஸ் தேடுங்க, பொண்ணுங்க படம் தவிர வேறு ஒன்னும் வராது.
அதனால்தான் நாம செரைக்கிற ப்ளேடுக்கு கூட மாடலா பொண்ணுங்க விளம்பரத்துல வாராங்க.
சரி சரி புலம்பாம பாட்டப் பாருங்க, நாம ஆம்பளையா பொறந்துட்டோம் நம்ம தலை எழுத்தை மாத்த முடியுமா?


நெஞ்சை வருடும் திகட்டாத தித்திக்கும் பாடல். பாடலுக்கு இசை  கம்போஸ் செய்த விதம் தேன் என்றால், பாடல் வரிகள் தேனில் விழுந்த பலா.
நம்முடைய தாத்தாக்கள் சில சிவாஜி, எம் ஜி யார் பாடல்களை இன்றும் கேட்கும் போது அடடா என்று வாயைப் பிளப்பார்களே, நமக்கும் வயதாகி இந்தப்பாடலைக் கேட்டாலும், இந்த பாடல் நம்மை வாய் பிளக்க வைக்கும் என்பது சத்தியம்.
பெரும்பாலும் ஆண்கள் பெண்களை நிலா,வானம்,தேன்,மலர் என்றுதான் வர்ணிப்பார்கள் ஆனால் இந்தப் பாடல் அவள் அழகில்லை என்று ஒரு நெகட்டிவ் தோரணையோடு செல்வதும், அதனோடு பெண்ணை வர்ணிப்பதும் அழகோ அழகு. இந்த பாடலைக் கேட்கும் போதோ, பார்க்கும் போதோ பள்ளி, கல்லூரி நாட்களுக்கு, நம் மனம் நம்மையும் அறியாமல் செல்கிறது.
மனதில் காதல் இல்லாத எந்த இசை அமைப்பாளரும் இப்படி ஒரு இசையினைத் தர இயலாது, மற்றுமொரு பாடலில் உங்களைச் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து பிரிய மனம் இல்லாமல் பிரிந்து செல்வது உங்கள் என்றும் இனியவன்.
 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

6 comments:

 1. // கடவுள், மனிதன் அறிவு மயங்கி, ஒரு போதையோடு அலையத்தான் பெண்ணைப் படைத்தாராம் //

  நல்லாதாம்யா இருக்கு....
  நன்றியும்.... வாழ்த்துக்களும் ....
  இனியவன்....

  ReplyDelete
 2. வெகு அருமையான பாடல். அதை பகிர்ந்தளித்த விதம் அருமை பகிர்வுக்கு நன்றி சகோ

  ReplyDelete