Friday 30 December 2011

பாடல் விமர்சனம் 1

அன்பு நண்பர்களே 15 நாட்களுக்குள் 15 கமெண்ட்ஸ் கொடுத்து என்னையும் தொடர்ந்து எழுத ஆதரவு கொடுத்த உங்களுக்கு  நன்றிகள் பல.
நாம் தினம் தோறும் செய்தித் தாள்களில் வாசிக்கும் போது விபத்து,திருட்டு, காதல் முக்கியமாக கள்ளக்காதல் இல்லாத செய்தித் தாள்கள் இந்தியாவிலேயே இருக்க முடியாது.
நாம் கள்ளக்காதலர்கள் பற்றிய செய்திகளைப் படிக்கும் போது செருப்ப சாணில முக்கி விளாசு விளாசுனு விலாசனும்னு தோணும்.
ஆனா இந்த பாட்டுல கதாநாயகன், மனைவி சரி இருக்க மாட்டாங்க, கதாநாயகனுக்கு சரியா சாப்பாடு போடுறதோ அவர உண்மையா நேசிக்கிறதோ இல்லை.
அன்புக்கு ஏங்குற இதயம், அன்பைத் தேடி அலையுது, வேறு ஒரு பெண்ணின்  உண்மையான அன்பு கதாநாயகனை கண் கலங்க வைக்கிறது.
எப்படியாவது அந்த பொன்னோடு சேர்ந்து வாழணும்னு அந்த கதாநாயகன் மனசு  மட்டும் இல்ல,நம்ம மனசும், அந்த பொன்னோடு கதாநாயகன் சந்தோசமா சேர்ந்து வாழணுன்னு ஏங்குது.
நீங்களே அந்த பாட்ட மொதல்ல பாருங்க,மத்தத அப்பறம் பேசிக்கலாம்.
எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத காவியம் இந்தப் பாடல். இந்தப் படத்துல சிவாஜி மனைவி சரி இல்ல,அன்புக்கு ஏங்குவாறு, ராதாவின் அன்பு அவர ஆறுதல் படுத்தும், கடைசியா ரெண்டு பேரும் சேர்ந்து வாழ மனசு ஏங்கும். நம்ம மனசும் படுற பாடு இருக்கே....படுத்தி எடுக்கும்.
ராசாவே வருத்தமா ...அந்த வரியும் அந்த புல்லாங்குழலும் இருக்கே, அதுக்கே ஒரு ஜென்மம் போதாது.
நான் எதுக்கு இந்த பாட்டை இன்றைய விமர்சனமா எடுதுக்கிட்டேனா, இந்த உறவும் ஒரு கள்ளக் காதல் தான், நாம வேணுனா நியாயப் படுத்தலாம், சிவாஜி மனைவி சரி இல்லன்னு, ஆனால் பச்சையா சொன்னா இது அதுதான்.எதுக்காக
நமக்கு அந்த உறவை சரின்னு ஏத்துக்க தோணுதுன்னா, அவரோட மனசும் நம்ம மனசும் அந்தப் படத்தோட ஒன்றி விடுவதுதான்.
ஆனால் பிரச்சனையின் வேர் தெரியாமல் பிரச்சனயை மட்டும் பார்த்தால் தவறாகத்தான் படும். அதுபோல தான் இன்றும் நிறைய தவறான உறவுகள் இந்த சமுகத்தில் தொடர் கதையாக இருக்கின்றன, எல்லா உறவும் காமம் தேடிய பயணம் இல்லை,பாசத்தையும் தேடித்தான்.
அது போன்ற செய்திகளை நாம் ஒருவேளை படிக்க நேர்ந்தால், அந்த மனிதர்களுக்கு இறைவன் சரியான வழியையும், கணவன் அல்லது மனைவியின் உண்மையான அன்பையும் வழங்க ஒரு நொடி பிரார்த்திப்போம்.


1 comment:

  1. ஒரு பூ காயாகி, காய் கனியாகிற வினாடியை உலகத்தில் யாராலும்,எந்த கருவியாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அந்த அதிசய மாற்றம் நம் கண்ணுக்கு முன்னாலேயே நடந்து இருக்கும். அது போல தான் காதலுக்கும், காமத்துக்குமான ஒரு இடைவெளி. இதற்கு வயதோ, வாலிபமோ காரணமில்லை. உடம்புக்கும் மனசுக்கும் நடக்கிற போரட்டத்தை வர்ணிக்கிற வார்த்தைகள் எந்த மொழியிலும் துல்லியமாக இல்லை. மனுஷனா பிறந்த நம் ஓவ்வொருவருக்கு உள்ளேயும் இந்த மாதிரி காதலும், காமமும் மாறி, மாறி ராட்டினம் மாறி சுத்துது.. சிலர் மயங்கிடுறாங்க, சிலர் தலை சுத்தலோட இறங்கிடுறாங்க, சிலர் யாருக்கும் தெரியாம அழுது, சிரிச்சி, நடிச்சி சமாளிசிடுறாங்க!!!! காதலோ, காமமோ மனசுல இருக்கிற வரைக்கும் தான் கௌரவம். அதுவே மூளைக்கு ஏறிட்டா எல்லோரும் ராவணன் தான்.. ஒரு மூளைக்குள் காமம் ஏறினாலே தடுமாறி நிக்கிறோம். ராவணனுக்கோ பத்து தலை, பத்து மூளை. சீதை அந்தப் பத்து தலையிலேயும் ஏறிப் படுத்திருக்கிறா. யார் சொன்ன கேட்பான் ராவணன்???? ஒருத்திக்கு ஒருவன் தான் என்றால் ஆயற்பாடியில் உள்ள அனைத்து பெண்களும் கண்ணை விரும்பினார்களே அப்போ அது காதல் இல்லையா????

    குறிப்பு : இது எனது சொந்த கருத்து இல்லை ஆனால் சரியானது, நான் படித்த ஒன்று தான்... பரிசுக்காக எழுதவில்லை, ஏதோ எழுத வேண்டும் என்று தோன்றியது அவ்வளவு தான்!! கிரி சைட் மூலம் உங்களை கண்டு கொண்டேன்.. நன்றி!!!

    ReplyDelete