Friday, 30 December 2011

பாடல் விமர்சனம் 1

அன்பு நண்பர்களே 15 நாட்களுக்குள் 15 கமெண்ட்ஸ் கொடுத்து என்னையும் தொடர்ந்து எழுத ஆதரவு கொடுத்த உங்களுக்கு  நன்றிகள் பல.
நாம் தினம் தோறும் செய்தித் தாள்களில் வாசிக்கும் போது விபத்து,திருட்டு, காதல் முக்கியமாக கள்ளக்காதல் இல்லாத செய்தித் தாள்கள் இந்தியாவிலேயே இருக்க முடியாது.
நாம் கள்ளக்காதலர்கள் பற்றிய செய்திகளைப் படிக்கும் போது செருப்ப சாணில முக்கி விளாசு விளாசுனு விலாசனும்னு தோணும்.
ஆனா இந்த பாட்டுல கதாநாயகன், மனைவி சரி இருக்க மாட்டாங்க, கதாநாயகனுக்கு சரியா சாப்பாடு போடுறதோ அவர உண்மையா நேசிக்கிறதோ இல்லை.
அன்புக்கு ஏங்குற இதயம், அன்பைத் தேடி அலையுது, வேறு ஒரு பெண்ணின்  உண்மையான அன்பு கதாநாயகனை கண் கலங்க வைக்கிறது.
எப்படியாவது அந்த பொன்னோடு சேர்ந்து வாழணும்னு அந்த கதாநாயகன் மனசு  மட்டும் இல்ல,நம்ம மனசும், அந்த பொன்னோடு கதாநாயகன் சந்தோசமா சேர்ந்து வாழணுன்னு ஏங்குது.
நீங்களே அந்த பாட்ட மொதல்ல பாருங்க,மத்தத அப்பறம் பேசிக்கலாம்.
எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத காவியம் இந்தப் பாடல். இந்தப் படத்துல சிவாஜி மனைவி சரி இல்ல,அன்புக்கு ஏங்குவாறு, ராதாவின் அன்பு அவர ஆறுதல் படுத்தும், கடைசியா ரெண்டு பேரும் சேர்ந்து வாழ மனசு ஏங்கும். நம்ம மனசும் படுற பாடு இருக்கே....படுத்தி எடுக்கும்.
ராசாவே வருத்தமா ...அந்த வரியும் அந்த புல்லாங்குழலும் இருக்கே, அதுக்கே ஒரு ஜென்மம் போதாது.
நான் எதுக்கு இந்த பாட்டை இன்றைய விமர்சனமா எடுதுக்கிட்டேனா, இந்த உறவும் ஒரு கள்ளக் காதல் தான், நாம வேணுனா நியாயப் படுத்தலாம், சிவாஜி மனைவி சரி இல்லன்னு, ஆனால் பச்சையா சொன்னா இது அதுதான்.எதுக்காக
நமக்கு அந்த உறவை சரின்னு ஏத்துக்க தோணுதுன்னா, அவரோட மனசும் நம்ம மனசும் அந்தப் படத்தோட ஒன்றி விடுவதுதான்.
ஆனால் பிரச்சனையின் வேர் தெரியாமல் பிரச்சனயை மட்டும் பார்த்தால் தவறாகத்தான் படும். அதுபோல தான் இன்றும் நிறைய தவறான உறவுகள் இந்த சமுகத்தில் தொடர் கதையாக இருக்கின்றன, எல்லா உறவும் காமம் தேடிய பயணம் இல்லை,பாசத்தையும் தேடித்தான்.
அது போன்ற செய்திகளை நாம் ஒருவேளை படிக்க நேர்ந்தால், அந்த மனிதர்களுக்கு இறைவன் சரியான வழியையும், கணவன் அல்லது மனைவியின் உண்மையான அன்பையும் வழங்க ஒரு நொடி பிரார்த்திப்போம்.


SIMBU'S LOVE ANTHEM VIDEO

தனுசுக்கு இணையாகன்னு சொல்வதை விட , தனுசுக்கு போட்டியாக இந்த வீடியோ களம் இரங்கி உள்ளது, ஒய்  திஸ் கொலைவெறி டி அளவிற்கு இந்த சாங் ஹிட் ஆகாதுன்னு நெனைக்கிறேன், ஒய் திஸ் கொலைவெறி ஒரு பொண்ண கலாய்க்கிற மாதிரி தீம், ஆனால் இந்த சாங் அன்பை மையப் படுத்துது,நம்ம பசங்களுக்கு மொதல்ல பொண்ணு, அப்பறம் தான் பண்ணு.நீங்க என்ன சொல்றீங்க?

Wednesday, 28 December 2011

புதிய விடியல்

நொடியாய்ப் பிறந்து
மணித் துளியாய் மறைந்து
புது ஆண்டாய் மலர்ந்த 
பொழுதே....
வறண்ட வாழ்வும் 
தளர்ந்த கையும் 
உன் வரவால் 
நிமிர்ந்து எழுதே!

புது வருடம் பிறந்தால் 
வாழ்வு மாறும்-என 
ஏங்கித் தவிக்கும் 
நெஞ்சம்..
உன் வரவே 
நெஞ்சின் தஞ்சம்!
இறந்த காலக் 
கவலை அதனை 
மறந்து வாழ
பிறந்து வா வா 
என் புதிய வாழ்வே
விரைந்து வா வா!
அழுதுவிட்டேன் 
ஆண்டு முழுதும் 
முயன்று பார்த்தேன் 
விழுந்து விட்டேன் 
அழுத நாளும் சேர்த்து 
மகிழ்ந்து வாழ 
எழுந்து நின்று 
இமயம் வெல்ல 
இனிய ஆண்டே 
இன்றே வா வா 
நன்றே வா வா!

அன்புடன் இனியவன் 
Sunday, 25 December 2011

தமிழா தமிழா...நாளை நம் நாளா ?


கசையடி பட்டும்
கண்ணீர் சிந்தோம்!
உதைகள் பட்டும் 
உணர்வைக் கூட்டோம்!
நம் காய்கனி தின்றவன் 
நம் தாயைப் பழிக்கிறான்!
விடியட்டும் என்று
இன்னும் தூக்கமோ?
விடியல்கள் விடிந்திடும்
நம் வாழ்க்கை விடியுமா?
கரங்கள் உயர்த்திடு 
கால்கள் நகரட்டும்-ஆ 
தமிழன் கூட அசைகிறான் என்று

அகிலம் உணரட்டும்.
                                                                          தமிழா தமிழா...நாளை நம் நாளா ?

Friday, 23 December 2011

தாங்கிப் பிடித்தேன் அவள் தலையை

காலையில் இருந்து மாலை வரை
நானும் அவளைக் காண்கின்றேன்!
காதலை அவிளிடம் வெளிப்படுத்த
வார்த்தை இன்றித் தவிக்கின்றேன்!
அவளும் சென்று மறையும் வரை
அசையாமல் நான் நிற்கின்றேன்!
அவளோ சென்ற பின்னாலே
வார்த்தை வந்து தவிக்கின்றேன்!

எத்தனை நாள்கள் இப்படியே 
நித்தமும் நினைவிலே வாழுவதோ
அக்கரைச் சூரியன் மறையும் நேரம்
சக்கரை கூடப் பிடிக்கலையே!


எப்படியும் இன்று சொல்வதென
மனதைக் கல்லாய் மாற்றிக்கொண்டு 
அவளைத் தனியாய் அழைத்தேனே 
அவள் அருகில் நின்று நெளிந்தேனே!

என்ன சொல்லென்று முனுமுனுத்தாள்
நாளைக்கு என்று நான் நகர்ந்தேன்!
சட்டென எந்தன் கை பிடித்து -காதலா?
என்று எனைப் பார்த்தாள்
அதுதான் அன்பே என்றுரைத்தால்
அடிப்பாளோ அனைப்பாளோ
தெரியலயே?
இப்படியும் ஒரு பேரழகை
இறைவா ஏன்தான் நீ படைத்தாய்?
அவள் பிடித்த என் கரம் அதை
விலக்கிக்கொண்டு
ஓட ஒரு கால் எடுத்து வைத்து
உண்மைதான் என்றேன்
தைரியமாய்!
தலைதனைக் குனிந்தாள்
தாமரையாய்
கலங்கிய கண்ணீர்
தரையில் விழ
தாங்கிப் பிடித்தேன்
அவள் தலையை!
ஒரு வருடமாய் என்னிடம்
சொல்லிட முயன்றேன்
முடியலை என்றழுதாள்.


Wednesday, 21 December 2011

முல்லைப் பெரியார் -ஒரே தொல்லைப் பெரியார்


கிரிக்கெட்ல இந்தியா ஜெயுச்சா மொத்த இந்தியனும் ஒன்னுகூடி சந்தோசப் படுறோம்.ஆனா அந்த சந்தோசம் காலைல வரைக்கும் கூட தாங்க மாட்டேங்குது. அதுக்கு இடையில் தண்ணீர் பிரச்சனை, வெந்நீர் பிரச்சனைன்னு நம்ம மக்கள் படுற பாடு ஒரே திண்டாட்டம்.சராசரி மனுஷன் வாழ்க்கைப் பிரச்சனைய சமாளிக்கிறதே நரக வேதனையா இருக்கு. இதற்கு இடையில் தினம் தினம் பந்த், போராட்டம்னு நாடு போற போக்கால நாசமாப் போறது என்னவோ சாமனிய மனுசங்கதான்.அவனுக புள்ளைகள ஆஸ்திரேலியா டூர் அனுப்பிட்டு, போராட்டம்னு இங்க அப்பாவிகள அழிக்கிரதுல நம்ம பெரிய மனுசங்கள மிஞ்ச ஆளே இல்லை.  இது பத்தாதுன்னு                                                                                                       மீடியாக்களும்,பொது ஜன மக்களும் அந்த அரசியல்வாதி சரி இல்லைன்னு இவன் சொல்றதுக்கும், இவன் சரி இல்லைன்னு அவன் சொல்றதுக்குமே நேரம் சரியா இருக்கு.  ஓட்டுக்கு பணத்த நாம வாங்கிட்டு அரசியல வியாபாரம் ஆக்கினது நாமளா? இல்ல அரசியல் வாதிகளா? லட்ச ரூபா போட்டு கடை நடத்துறவன் லாபம் பாக்குற மாதிரி, கோடி ரூபாய நம்மகிட்ட கொடுத்தவன் சும்மா இருப்பானா? நாம பத்து ரூபாய்க்காக அவன் பாக்கெட்ல கைய விட்டோம், இப்ப அவன் நம்ம கோவணத்த அவுக்கிறான்.

பெருசுக வேற நாங்கலாம் இருந்தப்ப, நாங்கல்லாம் இருந்தப்பனு வெட்டியா சொல்லிக்கிட்டு,நாடு இனிமே உருபுடாதுன்னு கூலா சொல்றதுல அதுகளுக்கு என்னதான் சந்தோசமோ. அவனுக புள்ள அமெரிக்கா செட்டில். நாட பத்தி அதுகளுக்கு என்ன கவலை. பெருசு இப்படினா சிறுசு, அதுகளுக்கு காதலிக்கவும்,தண்ணிய போட்டுட்டு புத்தி பேதலிக்க்கவுமே டைம் கரைக்டா இருக்கு.


அரசுத்துறை இலஞ்சத்துல மூல்கிப்போச்சுன்னு வேற நாம பண்ற நாடகம் இருக்கே,அப்பப்பா அதுக்கே ஆஸ்கார் தரலாம்.பத்து சீட்டுதான் இருக்குனா, எப்படியாவது நம்ம புள்ளைக்கு ஒரு சீட் வாங்கிடணும்னு, அடுத்தவன் தோளுல ஏறி சவாரி பண்ண லஞ்சம் கொடுக்குறது நாமளா இல்ல அரசுத்துறையா? அவன் கேக்குறான் அதனால்தான் நாம கொடுக்கிரோம்கிறது நொண்டிச்சாக்கு, நாம கொடுக்காட்டி அவன் கேப்பானா? யாருமே கொடுக்கலைனா, கடைசியா அந்த பத்து சீட்ட நியாயமா சேர வேண்டிய பத்து பேருக்கு அவன் குடுக்கதான் போறான்.நாம இவ்வளவு பேரும் ஒன்னா சேர்ந்து, நமக்கு வேண்டிய அளவுக்கு நாட்ட நாமலே நாசம் பண்ணிட்டு, நாடு நல்ல இருக்கணும்னு நினைக்கலாமா?
முதல்ல மாற வேண்டியது நாமதான், அப்பனும் ஆத்தாளும் சண்ட போடல, அண்ணனும் தம்பியும் சண்ட போடல அது மாதிரிதான் இந்த முல்லைப்பெரியாரும். நாம என்னதான் சண்ட போட்டாலும் நாம அண்ணன் தம்பி. நாம தன்னிக்கி,கரண்டுக்குனு கம்ப தூக்கினா எதிரி எண்ணைய ஊத்த ரெடியா இருக்கான். பெப்சிக்கும், கோக்குக்கும் கொடுக்கிற தண்ணிய நமக்கு தந்தாலே நாம யார்கிட்டயும் தண்ணிக்கு பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனா நாம தண்ணி குடிக்காம கூட இருப்போம் கோக் குடிக்காம இருப்போமா? நம்ம பய புள்ளைய தான் பேசிகளி பிரம் லண்டன்ல ....
                                                    
             

.

Sunday, 18 December 2011

காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை ?

காதல் சரியா தவறா என்ற கேள்வியின் சரியான பதில் ஒரு புரியாத புதிராகவே இன்று வரை இருக்கிறது. இன்னொருவன் தங்கையை நான் காதலிக்கும் போது சரியெனத்தோன்றும் காதல், என் தங்கையை இன்னொருவன் காதலித்தால் மட்டும் ஏன் தவறாகப் படுகிறது ? காதல் இந்த சமுதாயத்தை மாற்றும் என்றால் இன்று ஏன் விவாகரத்துகள் பெருகி இருக்கிறன? முதலில் நல்ல கணவன் மனைவியாக விட்டுக்கொடுத்து வாழவே முடியாத காதலர்களால், காதலால் இந்த சமுதாயத்தில் என்னதான் மாற்றம் நிகழ்ந்து விட முடியும்.
                                

அதற்காக நான் காதலிக்க வேண்டாம் என்று சொல்லவோ, காதலுக்கு எதிரியோ அல்ல, திறந்த மனதுடன் காதலை பற்றி சற்று நேரம் சிந்திக்கவே இந்த பதிவு. காதலித்து திருமணம் செய்த பெற்றோர் கூட காதல் திருமணத்தினை எதிர்கின்றனரே ஏன் ?
காதலுக்கு எதிரிகள் என்று நாம் பலரை சொல்கிறோம். தாயோ,தந்தையோ, அண்ணனோ, தம்பியோ இப்படி பலரை காதலுக்கு எதிரிகள் என்று சொல்கிறோம்
அதை எல்லாம் பற்றி நாம் இங்கு அதிகம் சிந்திக்க வேண்டாம். காதல்,காதலர் இருவர் பற்றி இன்னும் ஆழமாக சிந்திப்போம்.
காதலிக்கும் போது இன்பாக தோன்றும் காதல், திருமணமான கொஞ்ச நாட்களில் கசந்து விடுகிறதே ஏன் ? காதலிக்கும் போது காதலி கோபப்பட்டால் அதை ரசிக்கிற நாம்,திருமணம் ஆனவுடன் கோபப்பட்டால் அந்த கோபம் நம்மை ஏன் விவாகரத்து வரை ஏன் கொண்டு செல்கிறது?
ஒரு தகப்பன்  தன் மகன் எவ்வளவுதான் தன்னை கஷ்டப்படுத்தினாலும், தன் மகன் ஏதோ ஒரு சூழ்நிலையில் கலங்குவதைப் பார்க்கும் போது அந்த தகப்பன் கண்ணிலும் அவரை  அறியாமல் கண்ணீர் வருகிறதே? இது தானே உண்மையான அன்பின் அறிகுறி.
ஒரு புள்ளி விபரம் :
ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்னமே, விவாகரத்து கேட்கும் தம்பதிகள் தான் அதிகம் என்கிறது.ஏனெனில் மன உளைச்சலோடு உள்ள தம்பதிகளுக்கு ஒரு வெற்றிடம் உருவாகும், அந்த வெற்று இடத்தை பெரும்பாலான நேரங்களில் குழந்தைகளோ அல்லது உறவுகளோ சரி செய்து விடுவதால், நாட்கள் கொஞ்சம் நீளுகிறது, இந்த இடைப்பட்ட நாட்கள் ஒரு தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள போதுமானதாக இருக்கிறது.இந்த ஒரு காரணமே இன்று வரை நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை ஒரு கட்டுக்கோப்போடு  வைக்க ஓரளவு உதவி செய்கிறது. ஆனால் எந்த மாதிரியான திருமணங்களிலும் குடும்பம் என்றால் பிரச்சனைகள் கட்டாயம் இருக்கும்.
எந்த வயதில் காதல் வேண்டாம் ?
பக்குவமில்லாத வயதில் காதல் ஜெயித்தாலும் காதலர்களுக்கு ஆபத்து, தோற்றாலும் ஆபத்து என்றான் ஒரு மேலை நாடு அறிஞர். ஏனெனில் பக்குவமில்லாத வயதில் உள்ளம் பெரும் பாலும் உணர்சிகளுக்கு மட்டுமே அடிமையாக இருக்குமே ஒழிய, உண்மை சூழ்நிலையோடு பொருந்தி போகாது.
உதாரணம் சொல்ல வேண்டும் எனில் ஒரு கல்லூரிக்காதலன் கல்லூரியை கட் அடித்து விட்டு காதலியை பார்க்க போனால், காதலி உண்மையிலேயே அவனை நினைத்து உருகுவாள், எனக்காக என்னவெல்லாம் செய்கிறான் என்று. ஆனால் திருமணம் முடிந்து காதலன் வேலைக்கு லீவ் போட்டுவிட்டு நான் உன்னோடு இருக்கிறேன் என்று சதா வீட்டிலேயே இருந்தால், காதலி கட்டாயம் எரிச்சல் அடைவாள், ஏனெனில் குடும்பம் என்பது பொருளாதாரம் சம்பத்தப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
காதல் என்பது கனவு மாளிகை,ஆனால் குடும்பம் என்பது கனவு அல்ல நிஜத்தோடு கூடிய ஒரு பயணம்.இங்கு உண்மை சூழலைப் பொருது தான் உணர்ச்சி செயல் பட வேண்டும்.
கண்ணில் தொடங்கும் காதல் காமத்தோடு முடிந்துவிடும் 
இதனைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை, உண்மைக் காதலை தொலைத்து விட்டு காமத்தை தேடும் காதல் கண்ணில் தொடங்கி காமத்தில் முடிந்து விடும் .
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். பெண்ணை தேர்ந்து எடுக்கும் போது இருபது வயது இளைஞன் போல செல்லாதே,அறுபது வயது கிழவனைப் போல செல் என்கிறது ஒரு பலமொழி.அழகு முக்கியம் தான், அழகுக்காக திருமணம் என்பது நன்றாக பெயிண்ட் அடிக்கப்பட்ட கல்லறையை வீடாக பயன் படுத்துவதை போன்றது.உன் காதலுக்கு உண்மையான அன்பை கொடு அது உனக்கு அழியாத ஆனந்தத்தைக் கொடுக்கும்.Saturday, 17 December 2011

குழந்தை தொலைந்து விட்டதா ?

நாம் செய்தி தாள்களில் அன்றாடம் படிக்கிறோம் ,எங்கோ எவரின் குழந்தையோ,மகனோ ,மகளோ, மனைவியோ,கணவனோ,தொலைந்து விட்டார்கள் என்று, அதைபடிக்கும் போது நாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை, நமக்கு நம் நாலு சுவர் தான் உலகம், அங்கு நடக்கும் நிகழ்வுகள் தான் நம்மை கண்ணீர் விட,கவலை கொள்ள செய்யுமே ஒலிய வெளியே எது நடந்தாலும் நம்மை பொறுத்த வரை அது ஒரு சம்பவம் . என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.
சுமார் 5 வருடங்களுக்கு முன்பு நான் அப்பொழுதான் yahoo messenger ல் அதிகமாக சாட் செய்து வந்த நேரம் .கண் தெரியாத குருடனை போல இருந்தது முதன் முதலில் சாட்டிர்க்குள் வரும் போது.நமக்கும் நாலு நண்பர்கள் கிடைக்க மாட்டார்களா என்று என்று இரவு பகலாக நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு
திரிந்த காலம் அது,அத்தி பூத்தது போல பெண்கள் சாட்ல வருவாங்க அந்த நேரம் பாத்து டைப்பிங் ஸ்பீடாக வராது,அதுக்காகவே பல பேர் பாய் சொல்லி இருக்கிறார்கள், அப்பெல்லாம் மனசு வலிக்கிற வலி இருக்கே ...அது சொன்னா தீராது சொல்லுக்குள்ள அடங்காது.
இது பத்தாதுன்னு நம்ம பசங்க வேற, ஒரு பொண்ணு சாட்ல வந்துட்டா அவங்க போடுற சண்ட இருக்கே ....(அதுக்கு) அலையிற நாய் போடுற சண்ட கூட பரவா இல்லை.இருந்தாலும் என்னங்க பண்றது என் கண்ண படைச்ச கடவுளு பொண்ண படைக்காம இருந்திருக்கணும் , இல்ல பொண்ண படச்சவன் கண்ண படைக்காம இருந்திருக்கணும்.இப்படியே ஒரு நாலு மாசம் போச்சு.

ஒரு நாள் மாலை நேரம் சாட் பண்ணிட்டு இருந்தேன்,எல்லா நாள் போலவும் இன்னைக்கும் சாட் பண்ணினது வேஸ்ட் என்று எண்ணிட்டு 4 .30  ஆக ஐந்து நிமிடம் இருந்ததால வேண்டா வெறுப்பாக சாட் பண்ணிட்டு இருந்தேன், திவ்யா cbe ன்னு ஒரு id கண்ணுல பட்டது,ஹாய்ன்னு சாட்ட நான் தான் ஆரம்பிச்சேன், அவளும் பதிலுக்கு ஹாய்ன்னு சொன்னா.நான் ஒரு கேள்வி கேட்டேன் அவ பதில் சொன்னா,மறுபடியும் நான் கேள்வி கேட்டேன் அதுக்கும் அவ பதில் சொன்னா,என்ன பத்தி அவ கேட்டா  நானும் பதில் சொன்னேன், உணமையிலேயே அந்த சாட்ல ஒரு கெமிஸ்ட்ரி இருந்தது.  அவ என்ன messenger list ல add பண்ணினா. நாளைக்கு சாட்க்கு வருவியான்னு கேட்டேன். 4 .30 க்கு வருவேன்னு சொன்னா .நாங்க பேசினத சுருக்கமா சொல்றேன். அவ பேரு உண்மையிலேயே திவ்யா தான், சொந்த ஊரு சேலம், அப்பா ஒரு டாக்டர்னு சொன்னா, கோவைல அவினாஷி லிங்கம் காலேஜ்ல இன்ஜினியரிங் படிக்கிறேன்னு சொன்னா.நான் என்ன பத்தி சொன்னேன்.நாளைக்கு கண்டிப்பா சாட்ல அவல வர சொன்னேன், அவளும் வரேன்னு சொன்னா .
என் வாழ் நாளுல மறு நாள் எப்ப வரும்னு எதிர்பாத்து காத்து இருந்தது அதுதான் முதல் டைம்.நைட் ரெம்ப எதிர் பார்போட போச்சு, மறுநாளும் வந்தது,நான் 3 மணிக்கெல்லாம் வந்தேன்  அவ 4 .30 மணிக்கு மேல தான் அவ சாட்ல வந்தா.மறுநாள் அவ வேறு யாரு கூடவும் சாட் பண்ணல, சாட் அவ்வளவு சுவாரஸ்யமா போச்சு, இப்படியே ஒரு வாரம் போச்சு.
                                
                                                                                     
அவளோட மொபைல் நம்பர நான் கேட்டேன், அவளும் அவ நம்பர தந்தா, கால் பண்ணவான்னு கேட்டேன் ,காலேஜ் ல இருக்கும் போதோ அவ லீவ்ல சேலம் போய் இருக்கும் போதோ கால் பண்ண வேண்டான்னு சொன்னா, நான் கண்டிப்பா உங்களுக்கு ப்ராப்ளம் வர மாதிரி நடக்க மாட்டேனு சொன்னேன் . அன்று இரவு அவளுக்கு கால் பண்ணினேன், அப்ப அவ வொர்கிங் வுமேன்ஸ் ஹாஸ்டல்ல இருந்தா நைட் நெறைய நேரம் பேசினோம்.எங்க ரெண்டு பேரோட உணர்வுகள் ஒன்னா இருந்ததால நேரம் போனதே தெரியல.இப்படியே ஒரு நாலு மாசம் போய் இருக்கும், நான் உன்னை பார்க்க வரலாமானு கேட்டேன், நான் கோயம்புத்தூர்ல இருக்கேன் நீ சென்னைல இருக்கேனு சொன்னா , நான் பரவா இல்லை நான் வரேன்னு சொன்னேன் , நான் சும்மா சொல்றேன்னு நெனசுகிட்டு வா பாக்கலாம்னு சொன்னா.
                                         
நான் அன்று இரவே கோவைக்கு சென்றேன், நான் போறது அவளுக்கு கூட 
சொல்லல .நான் போனா என்னை பார்க்க வருவாளா, இல்ல திட்டுவாலான்னு ஒரு பக்கம் பக்கு பக்குன்னு இருந்தது,எப்படியோ அதிகாலை 5  மணி சுமாருக்கு கோவை வந்துவிட்டேன்.சரியா ஆறு மணிக்கு அவளுக்கு கால் பண்ணி நான் கோவை வந்த விஷயத்தை சொன்னேன், காலேஜ் பஸ் 7 மணிக்கு வந்துடும் அதுக்குள்ள காந்திபுரம் வந்துட்டு திரும்ப முடியாது,சாயங்காலம் வரேன்னு சொன்னா,கால் பண்ணாத காலேஜ்ல இருப்பேன்னு சொன்னா.
நான் காலையில 10  மணிக்கு ஒரு படத்துக்கு போனேன். ஆனா அவளே 1  மணிக்கு கால் பண்ணி சாப்டியான்னு கேட்டா , ரெம்ப நேரம் பேசல, 4 .45 மணிக்கு மறுபடி அவ கால் பண்ணினா, நீ வரேன்னு சும்மா சொல்றேன்னு நெனச்சேன்னு சொன்னா, 7  மணிக்கு சாய்பாபா காலனில இருக்கிற பேம்பூ சூட் restaurant க்கு சொன்னா, நீ எப்படி இருப்பேன்னு கேட்டா  , மொபைல்ல கால் பண்றேன்னு சொன்னேன் .
                                
நான் ஆறு மணிக்கெல்லாம் ஆட்டோவுல அங்க போயிட்டேன், அவ வரேன் 
வரேன்ன  7 .30 மணிக்கு மேல தான் வந்த , நான் என்னையே நம்பல . அவ ஒரு ரோஸ் கலர் சுடில வந்து இருந்தா , அந்த நேரத்தை இன்னைக்கு கூட என்னால மறக்க முடியாது .ரெண்டு பெரும் சாப்பிட்டோம்,அவ ஒன்பது மணிக்குள்ள ஹாஸ்டல் போகனுன்னு சொன்னா அதனால ஒரு மணிநேரம் மட்டுமே அவ இருந்தா .நானும் அன்று இரவே சென்னை கெளம்பிட்டேன் , அந்த நாளுக்கு அப்பறம் நாங்க இன்னும் கொஞ்சம் திக் பிரண்ட்ஸ் ஆயிட்டோம் .அதுக்கப்பறம் நாங்க சாட்ல பேசுறதே இல்ல , எப்ப பேசனுன்னு நெனச்சாலும் மொபைல் தான் .
அவளுக்கு படிப்பு முடிஞ்சு சென்னைக்கே வொர்க் பண்ண வந்தா, அங்க ஒரு ஆறு மாதம் டிரைனியாக வேலை பார்த்ததால நெறைய லீவ் அவளுக்கு இல்ல, நைட் கொஞ்ச நேரம் தான் கால் பண்ணுவா, அந்த ஆறு மாதத்துல ஒரு தடவைதான் நாங்க சில்ரன்ஸ் பார்க் போனோம்.அதுக்கு அப்பறம் அவளுக்கு உடம்பு சரி இல்லாம சேலம் போய்ட்டா, அவ வீட்ல இருந்ததால அவளே எப்பவாவது கால் பண்ணுவா. இந்த நேரம் அந்த துயரமான ஒரு சம்பவம் என் வாழ்கையில நடந்தது.
பஸ்ல டிராவல் பண்ணும் போது என்னோட மொபைல் தொலஞ்சு போச்சு, அவளுக்கு போன் பண்ணவும் பயம் ,வேற யாரவது மொபைல்ல எடுத்துட்டா நான் மெயில் கூட பண்ணி பார்த்தேன், பதிலே இல்ல.ஒரு ரெண்டு மாசம் கழித்து நான் ஒரு STD ல மொபைல் போனுக்கு கால் பண்ணினேன், மொபைல் சுவிட்ச் ஆப்னு வந்தது.மறுபடி மறுபடி ஒரு நூறு தடவை யாவது பண்ணி இருப்பேன்.
இன்னைக்கும் அவல பார்க்க ஆசை ஆனா முடியல, காலேஜ்ல கூட அவ பத்தி டீடைல்ஸ் கேட்டேன், லேடீஸ் காலேஜ் டீடைல்ஸ் தர மறுத்து விட்டார்கள். அவ இப்ப இந்தியால இருக்காளோ இல்ல வெளிநாட்டுல இருக்களோ,ஆனா எங்கயோ இருக்கா, அவல ஒரு தடவ பாத்துட்டா போதும்.பேரு திவ்யா ,அப்பா டாக்டர் அவ பிரண்ட் பேர் ப்ரீதா திருச்சி இத தவிர வேறு  எதுவும் தெரியாது.
                               
நான் இன்னமும் அவல தேடுறேன், என்றாவது கிடைப்பாள் என்ற நம்பிக்கையில் 
ஒரு நான்கு வருட பழக்கம் ,அவல இன்னைக்கு நெனச்சாலும் என் கண்ணுல தண்ணி வரும் , இதுக்கே மனசு இவ்வளவு ரணமா இருக்குணா ஒரு குழந்தைய இழந்த தாய் எப்படி இருப்பாங்கனு என்பது ஜீரணிக்க முடியாத விஷயம்.இந்த மாதிரி காயத்துக்கு கடவுள தவிர யாரும் மருந்து போட முடியாது,காணாமல் போனவர்கள் பற்றிய செய்திய பார்க்கும் போதோ,கேக்கும் போதோ அவர்களுக்காக ஒரு நிமிடம் பிரே பண்ணுங்க ,காயப்பட்ட இதயத்துக்கும் கூட.

Friday, 16 December 2011

பயணம்-குறைந்த செலவில் ஊர் சுற்றலாம்


அன்பு நண்பர்களே , நம் வாழ்வில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பயணம் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறி விட்டது, நாம் சும்மா இருந்தாலும் நொடிகள் பயணப்பட மறப்பதில்லை....சரி சரி நான் விசயத்திற்கு வருகிறேன்.
                                                           நாம் எங்காவது வேலை விஷயமாகவோ அல்லது சுற்றுலாவோ சென்றால் உணவுக்கு அடுத்த செலவினம் தங்கும் விடுதிகள் தான், உதாரணமாக நாம் குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு ஊட்டி செல்கிறோம் அல்லது கோவா அல்லது பெங்களூர் செல்கிறோம் என்று வைத்துகொள்வோம்.
இன்றய சூழலில் சுமார் நான்கு நபர்கள் தங்கினால் ஒரு நாளைக்கு நான்கு நபர்கள் ஒரு நல்ல லாட்சில் தங்கிட சுமார் ஆயிரம் ரூபாயாவது ஆகும். இதற்காகவே நாம் அனேக நேரங்களில் நாம் சுற்றுலா குடும்பத்தோடு செல்ல பயப்படுகிறோம். நாம் ஒரு நபராக தங்கினாலும் 500 ரூபாய்க்கு குறைவாக நல்ல லாட்சு கிடைப்பதில்லை. சுற்றுலா தளங்களில் கேட்கவே வேண்டாம்.
குறைந்த செலவில் தங்கிட ஒரு மாற்று வழி உண்டு, ஒரு நபருக்கு 125  மட்டும் செலுத்தி நல்ல ஒரு இடத்தில் நாம் குடும்பத்தோடு தங்கிட இயலும். அதற்காகவே இந்த பதிவு.
YOUTH HOSTEL  ASSOCIATION OF  INDIA என்ற ஒன்று உண்டு.
அங்கு நாம் ஒரு நபருக்குஒரு நாளுக்கு   125  ரூபாய் வாடகையில் நாம் சவுகரியமாக தங்கிடலாம். யூத் ஹாஸ்டல் என்றவுடன் யூத் மட்டும் தான் தங்க முடியும் என்றில்லை, யார் வேண்டுமானாலும் தங்கிடலாம். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி தனி தங்குமிட வசதி உண்டு.குடும்பமாக சென்றால் குடும்ப அறை family room  கூட உண்டு. அதிகபட்சமாக ஒரு நபர் அல்லது குடும்பமோ ஏழு நாட்கள் வரை தங்கலாம். இந்திய முழுவதும் சுமார் ஆயிரம் இடங்களில் அணைத்து மாநிலத்திலும் இந்த ஹாஸ்டல் உண்டு.நான் ஊட்டி , பெங்களூர் ஹாஸ்டலில்  சுமார் பத்து தடவைகளுக்கு மேல் தங்கி உள்ளேன். தேவை பட்டால் மெம்பர்ஷிப் வசதியும் உண்டு.ஆயுள் மெம்பர் கட்டணமே 1550 ரூபாய் தான்.
இந்த ஹாஸ்டல்களில் அடிக்கடி பல்வேறு முகாம்கள் நடப்பது உண்டு . நாம் குடும்பமாகவோ அல்லது தனி நபராகவோ அல்லது நண்பர்களாகவோ செல்லலாம், உதாரணமாக கோவா மற்றும் ஊட்டியில் நாம் குடும்பமாக சென்று தங்கிட,சாப்பிட,சுற்றிப்பார்க்க கட்டணம் 3500  ரூபாய் மட்டும் தான், 5  முதல் 7 நாட்கள் வரை தங்கலாம் . நண்பர்களே 125 ரூபாய்க்கு நன்றாக இருக்காது என்று நினைக்காதீர்கள், நான் நிச்சயம் சொல்கிறேன் சூப்பர் ஆக இருக்கும்.
தமிழ் நாட்டில் சென்னை, மதுரையில் கூட ஹாஸ்டல் உண்டு.முதலில் குடும்பமாக செல்லா விட்டாலும் நீங்கள் தனியாக செல்லும் போது ஒரு தடவை தங்கி பாருங்கள், அப்பறம் வேறு எங்கும் தங்கி காசை விரயம் பண்ண மாட்டீர்கள். செல்லு முன் , செல்ல வேண்டிய ஹாஸ்டலுக்கு போன் செய்து விட்டு போங்கள். அப்பொழுது இடம் இல்லாமல் போவதை தடுக்கலாம்.

குடும்ப முகாம் செல்ல தவற வேண்டாம். நண்பர்களுடன் செல்லலாம் , எல்லா மாதங்களிலும் நடைபெறும், குடும்பத்திற்கு ஒரு டென்ட் தருவார்கள் , அருகில் உள்ள படைத்தை பாருங்கள் இது குடும்ப முகாமின் படம் தான். சொன்னா புரியாது .சில நேரங்களில் ஆண்களுக்கும் , பெண்களுக்கும் ,குடும்பத்திற்கும் தனி தனியாக முகாம் நடக்கும்.
குடும்ப முகாம் தான் செல்ல வேண்டும் என்றில்லை,ஒரு நாள் இரண்டு நாள் வேண்டுமானாலும் தங்கலாம்.
பெரும்பாலான ஹாஸ்டல்களில் மெஸ் வசதியும் உண்டு,விலை கூட மிகவும் குறைவாகத்தான் இருக்கும். அருகில் உள்ள படம் கோவாவில் நடைபெற்ற பைக்கிங் கேம்ப்பின் படம் ஆகும். ஒரு வாரம் கோவாவை சுற்றிப்பார்க்கலாம் , 7  நாள் டூர் , தங்குமிடம், உணவு, சைக்கிள் வாடகை , எல்லாம் சேர்த்து 3500  ரூபாய்தான் .  மேலும் விபரம் அறிய :      
               www . yhaindia .org     
என்ற இணைய தளத்தை தொடர்பு கொள்க.  என்ஜாய் என்ஜாய் என்ஜாய் என்ஜாய் என்ஜாய் .

நண்பர்களே இது என் முதல் பதிவு, குறை இருந்தால் மன்னிக்கவும். கண்டிப்பாக உங்கள் விமர்சனம் தேவை.
http://www.yhaindia.org