கிரிக்கெட்ல இந்தியா ஜெயுச்சா மொத்த இந்தியனும் ஒன்னுகூடி சந்தோசப் படுறோம்.ஆனா அந்த சந்தோசம் காலைல வரைக்கும் கூட தாங்க மாட்டேங்குது. அதுக்கு இடையில் தண்ணீர் பிரச்சனை, வெந்நீர் பிரச்சனைன்னு நம்ம மக்கள் படுற பாடு ஒரே திண்டாட்டம்.சராசரி மனுஷன் வாழ்க்கைப் பிரச்சனைய சமாளிக்கிறதே நரக வேதனையா இருக்கு. இதற்கு இடையில் தினம் தினம் பந்த், போராட்டம்னு நாடு போற போக்கால நாசமாப் போறது என்னவோ சாமனிய மனுசங்கதான்.அவனுக புள்ளைகள ஆஸ்திரேலியா டூர் அனுப்பிட்டு, போராட்டம்னு இங்க அப்பாவிகள அழிக்கிரதுல நம்ம பெரிய மனுசங்கள மிஞ்ச ஆளே இல்லை. இது பத்தாதுன்னு மீடியாக்களும்,பொது ஜன மக்களும் அந்த அரசியல்வாதி சரி இல்லைன்னு இவன் சொல்றதுக்கும், இவன் சரி இல்லைன்னு அவன் சொல்றதுக்குமே நேரம் சரியா இருக்கு. ஓட்டுக்கு பணத்த நாம வாங்கிட்டு அரசியல வியாபாரம் ஆக்கினது நாமளா? இல்ல அரசியல் வாதிகளா? லட்ச ரூபா போட்டு கடை நடத்துறவன் லாபம் பாக்குற மாதிரி, கோடி ரூபாய நம்மகிட்ட கொடுத்தவன் சும்மா இருப்பானா? நாம பத்து ரூபாய்க்காக அவன் பாக்கெட்ல கைய விட்டோம், இப்ப அவன் நம்ம கோவணத்த அவுக்கிறான்.
பெருசுக வேற நாங்கலாம் இருந்தப்ப, நாங்கல்லாம் இருந்தப்பனு வெட்டியா சொல்லிக்கிட்டு,நாடு இனிமே உருபுடாதுன்னு கூலா சொல்றதுல அதுகளுக்கு என்னதான் சந்தோசமோ. அவனுக புள்ள அமெரிக்கா செட்டில். நாட பத்தி அதுகளுக்கு என்ன கவலை. பெருசு இப்படினா சிறுசு, அதுகளுக்கு காதலிக்கவும்,தண்ணிய போட்டுட்டு புத்தி பேதலிக்க்கவுமே டைம் கரைக்டா இருக்கு.
அரசுத்துறை இலஞ்சத்துல மூல்கிப்போச்சுன்னு வேற நாம பண்ற நாடகம் இருக்கே,அப்பப்பா அதுக்கே ஆஸ்கார் தரலாம்.பத்து சீட்டுதான் இருக்குனா, எப்படியாவது நம்ம புள்ளைக்கு ஒரு சீட் வாங்கிடணும்னு, அடுத்தவன் தோளுல ஏறி சவாரி பண்ண லஞ்சம் கொடுக்குறது நாமளா இல்ல அரசுத்துறையா? அவன் கேக்குறான் அதனால்தான் நாம கொடுக்கிரோம்கிறது நொண்டிச்சாக்கு, நாம கொடுக்காட்டி அவன் கேப்பானா? யாருமே கொடுக்கலைனா, கடைசியா அந்த பத்து சீட்ட நியாயமா சேர வேண்டிய பத்து பேருக்கு அவன் குடுக்கதான் போறான்.நாம இவ்வளவு பேரும் ஒன்னா சேர்ந்து, நமக்கு வேண்டிய அளவுக்கு நாட்ட நாமலே நாசம் பண்ணிட்டு, நாடு நல்ல இருக்கணும்னு நினைக்கலாமா?
முதல்ல மாற வேண்டியது நாமதான், அப்பனும் ஆத்தாளும் சண்ட போடல, அண்ணனும் தம்பியும் சண்ட போடல அது மாதிரிதான் இந்த முல்லைப்பெரியாரும். நாம என்னதான் சண்ட போட்டாலும் நாம அண்ணன் தம்பி. நாம தன்னிக்கி,கரண்டுக்குனு கம்ப தூக்கினா எதிரி எண்ணைய ஊத்த ரெடியா இருக்கான். பெப்சிக்கும், கோக்குக்கும் கொடுக்கிற தண்ணிய நமக்கு தந்தாலே நாம யார்கிட்டயும் தண்ணிக்கு பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனா நாம தண்ணி குடிக்காம கூட இருப்போம் கோக் குடிக்காம இருப்போமா? நம்ம பய புள்ளைய தான் பேசிகளி பிரம் லண்டன்ல ....
.
//ஆனா நாம தண்ணி குடிக்காம கூட இருப்போம் கோக் குடிக்காம இருப்போமா? //
ReplyDeleteபுலம்பலும் கோவமும் நகைப்பும் கலந்த இடுகை...வாழ்த்துக்கள்..
தளத்திற்கு அழைத்தமைக்கு நன்றி...
மகிழ்ச்சியுடன் இணைகிறேன் தோழரே..
உங்களை இருகரம் கூப்பி அன்புடன் வரவேற்கிறேன் தோழரே. வருகைக்கு நன்றி மயிலன்.
ReplyDelete