அன்பு நண்பர்களே , நம் வாழ்வில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பயணம் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறி விட்டது, நாம் சும்மா இருந்தாலும் நொடிகள் பயணப்பட மறப்பதில்லை....சரி சரி நான் விசயத்திற்கு வருகிறேன்.
நாம் எங்காவது வேலை விஷயமாகவோ அல்லது சுற்றுலாவோ சென்றால் உணவுக்கு அடுத்த செலவினம் தங்கும் விடுதிகள் தான், உதாரணமாக நாம் குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு ஊட்டி செல்கிறோம் அல்லது கோவா அல்லது பெங்களூர் செல்கிறோம் என்று வைத்துகொள்வோம்.
இன்றய சூழலில் சுமார் நான்கு நபர்கள் தங்கினால் ஒரு நாளைக்கு நான்கு நபர்கள் ஒரு நல்ல லாட்சில் தங்கிட சுமார் ஆயிரம் ரூபாயாவது ஆகும். இதற்காகவே நாம் அனேக நேரங்களில் நாம் சுற்றுலா குடும்பத்தோடு செல்ல பயப்படுகிறோம். நாம் ஒரு நபராக தங்கினாலும் 500 ரூபாய்க்கு குறைவாக நல்ல லாட்சு கிடைப்பதில்லை. சுற்றுலா தளங்களில் கேட்கவே வேண்டாம்.
குறைந்த செலவில் தங்கிட ஒரு மாற்று வழி உண்டு, ஒரு நபருக்கு 125 மட்டும் செலுத்தி நல்ல ஒரு இடத்தில் நாம் குடும்பத்தோடு தங்கிட இயலும். அதற்காகவே இந்த பதிவு.
YOUTH HOSTEL ASSOCIATION OF INDIA என்ற ஒன்று உண்டு.
அங்கு நாம் ஒரு நபருக்குஒரு நாளுக்கு 125 ரூபாய் வாடகையில் நாம் சவுகரியமாக தங்கிடலாம். யூத் ஹாஸ்டல் என்றவுடன் யூத் மட்டும் தான் தங்க முடியும் என்றில்லை, யார் வேண்டுமானாலும் தங்கிடலாம். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி தனி தங்குமிட வசதி உண்டு.குடும்பமாக சென்றால் குடும்ப அறை family room கூட உண்டு. அதிகபட்சமாக ஒரு நபர் அல்லது குடும்பமோ ஏழு நாட்கள் வரை தங்கலாம். இந்திய முழுவதும் சுமார் ஆயிரம் இடங்களில் அணைத்து மாநிலத்திலும் இந்த ஹாஸ்டல் உண்டு.நான் ஊட்டி , பெங்களூர் ஹாஸ்டலில் சுமார் பத்து தடவைகளுக்கு மேல் தங்கி உள்ளேன். தேவை பட்டால் மெம்பர்ஷிப் வசதியும் உண்டு.ஆயுள் மெம்பர் கட்டணமே 1550 ரூபாய் தான்.
இந்த ஹாஸ்டல்களில் அடிக்கடி பல்வேறு முகாம்கள் நடப்பது உண்டு . நாம் குடும்பமாகவோ அல்லது தனி நபராகவோ அல்லது நண்பர்களாகவோ செல்லலாம், உதாரணமாக கோவா மற்றும் ஊட்டியில் நாம் குடும்பமாக சென்று தங்கிட,சாப்பிட,சுற்றிப்பார்க்க கட்டணம் 3500 ரூபாய் மட்டும் தான், 5 முதல் 7 நாட்கள் வரை தங்கலாம் . நண்பர்களே 125 ரூபாய்க்கு நன்றாக இருக்காது என்று நினைக்காதீர்கள், நான் நிச்சயம் சொல்கிறேன் சூப்பர் ஆக இருக்கும்.
தமிழ் நாட்டில் சென்னை, மதுரையில் கூட ஹாஸ்டல் உண்டு.முதலில் குடும்பமாக செல்லா விட்டாலும் நீங்கள் தனியாக செல்லும் போது ஒரு தடவை தங்கி பாருங்கள், அப்பறம் வேறு எங்கும் தங்கி காசை விரயம் பண்ண மாட்டீர்கள். செல்லு முன் , செல்ல வேண்டிய ஹாஸ்டலுக்கு போன் செய்து விட்டு போங்கள். அப்பொழுது இடம் இல்லாமல் போவதை தடுக்கலாம்.
குடும்ப முகாம் செல்ல தவற வேண்டாம். நண்பர்களுடன் செல்லலாம் , எல்லா மாதங்களிலும் நடைபெறும், குடும்பத்திற்கு ஒரு டென்ட் தருவார்கள் , அருகில் உள்ள படைத்தை பாருங்கள் இது குடும்ப முகாமின் படம் தான். சொன்னா புரியாது .சில நேரங்களில் ஆண்களுக்கும் , பெண்களுக்கும் ,குடும்பத்திற்கும் தனி தனியாக முகாம் நடக்கும்.
குடும்ப முகாம் தான் செல்ல வேண்டும் என்றில்லை,ஒரு நாள் இரண்டு நாள் வேண்டுமானாலும் தங்கலாம்.
பெரும்பாலான ஹாஸ்டல்களில் மெஸ் வசதியும் உண்டு,விலை கூட மிகவும் குறைவாகத்தான் இருக்கும். அருகில் உள்ள படம் கோவாவில் நடைபெற்ற பைக்கிங் கேம்ப்பின் படம் ஆகும். ஒரு வாரம் கோவாவை சுற்றிப்பார்க்கலாம் , 7 நாள் டூர் , தங்குமிடம், உணவு, சைக்கிள் வாடகை , எல்லாம் சேர்த்து 3500 ரூபாய்தான் .
மேலும் விபரம் அறிய :
www . yhaindia .org
என்ற இணைய தளத்தை தொடர்பு கொள்க. என்ஜாய் என்ஜாய் என்ஜாய் என்ஜாய் என்ஜாய் .
நண்பர்களே இது என் முதல் பதிவு, குறை இருந்தால் மன்னிக்கவும். கண்டிப்பாக உங்கள் விமர்சனம் தேவை.
http://www.yhaindia.org
Useful Article
ReplyDeleteThanks for Sharing
உங்களின் விமர்சனத்திற்கு நன்றி நண்பரே.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNice article.. Bestof luck
ReplyDeleteThanks for the info.
ReplyDeleteஉங்களின் விமர்சனத்திற்கு நன்றி நண்பர்களே.
ReplyDeleteநல்ல தகவல்! யூத் ஹாஸ்டல்ஸ் பத்தி நானும் கேள்விப்பட்டிருக்கேன்.........
ReplyDeleteநண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
ReplyDeleteநன்றி
யாழ் மஞ்சு