Sunday, 18 December 2011

காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை ?

காதல் சரியா தவறா என்ற கேள்வியின் சரியான பதில் ஒரு புரியாத புதிராகவே இன்று வரை இருக்கிறது. இன்னொருவன் தங்கையை நான் காதலிக்கும் போது சரியெனத்தோன்றும் காதல், என் தங்கையை இன்னொருவன் காதலித்தால் மட்டும் ஏன் தவறாகப் படுகிறது ? காதல் இந்த சமுதாயத்தை மாற்றும் என்றால் இன்று ஏன் விவாகரத்துகள் பெருகி இருக்கிறன? முதலில் நல்ல கணவன் மனைவியாக விட்டுக்கொடுத்து வாழவே முடியாத காதலர்களால், காதலால் இந்த சமுதாயத்தில் என்னதான் மாற்றம் நிகழ்ந்து விட முடியும்.
                                

அதற்காக நான் காதலிக்க வேண்டாம் என்று சொல்லவோ, காதலுக்கு எதிரியோ அல்ல, திறந்த மனதுடன் காதலை பற்றி சற்று நேரம் சிந்திக்கவே இந்த பதிவு. காதலித்து திருமணம் செய்த பெற்றோர் கூட காதல் திருமணத்தினை எதிர்கின்றனரே ஏன் ?
காதலுக்கு எதிரிகள் என்று நாம் பலரை சொல்கிறோம். தாயோ,தந்தையோ, அண்ணனோ, தம்பியோ இப்படி பலரை காதலுக்கு எதிரிகள் என்று சொல்கிறோம்
அதை எல்லாம் பற்றி நாம் இங்கு அதிகம் சிந்திக்க வேண்டாம். காதல்,காதலர் இருவர் பற்றி இன்னும் ஆழமாக சிந்திப்போம்.
காதலிக்கும் போது இன்பாக தோன்றும் காதல், திருமணமான கொஞ்ச நாட்களில் கசந்து விடுகிறதே ஏன் ? காதலிக்கும் போது காதலி கோபப்பட்டால் அதை ரசிக்கிற நாம்,திருமணம் ஆனவுடன் கோபப்பட்டால் அந்த கோபம் நம்மை ஏன் விவாகரத்து வரை ஏன் கொண்டு செல்கிறது?
ஒரு தகப்பன்  தன் மகன் எவ்வளவுதான் தன்னை கஷ்டப்படுத்தினாலும், தன் மகன் ஏதோ ஒரு சூழ்நிலையில் கலங்குவதைப் பார்க்கும் போது அந்த தகப்பன் கண்ணிலும் அவரை  அறியாமல் கண்ணீர் வருகிறதே? இது தானே உண்மையான அன்பின் அறிகுறி.
ஒரு புள்ளி விபரம் :
ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்னமே, விவாகரத்து கேட்கும் தம்பதிகள் தான் அதிகம் என்கிறது.ஏனெனில் மன உளைச்சலோடு உள்ள தம்பதிகளுக்கு ஒரு வெற்றிடம் உருவாகும், அந்த வெற்று இடத்தை பெரும்பாலான நேரங்களில் குழந்தைகளோ அல்லது உறவுகளோ சரி செய்து விடுவதால், நாட்கள் கொஞ்சம் நீளுகிறது, இந்த இடைப்பட்ட நாட்கள் ஒரு தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள போதுமானதாக இருக்கிறது.இந்த ஒரு காரணமே இன்று வரை நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை ஒரு கட்டுக்கோப்போடு  வைக்க ஓரளவு உதவி செய்கிறது. ஆனால் எந்த மாதிரியான திருமணங்களிலும் குடும்பம் என்றால் பிரச்சனைகள் கட்டாயம் இருக்கும்.
எந்த வயதில் காதல் வேண்டாம் ?
பக்குவமில்லாத வயதில் காதல் ஜெயித்தாலும் காதலர்களுக்கு ஆபத்து, தோற்றாலும் ஆபத்து என்றான் ஒரு மேலை நாடு அறிஞர். ஏனெனில் பக்குவமில்லாத வயதில் உள்ளம் பெரும் பாலும் உணர்சிகளுக்கு மட்டுமே அடிமையாக இருக்குமே ஒழிய, உண்மை சூழ்நிலையோடு பொருந்தி போகாது.
உதாரணம் சொல்ல வேண்டும் எனில் ஒரு கல்லூரிக்காதலன் கல்லூரியை கட் அடித்து விட்டு காதலியை பார்க்க போனால், காதலி உண்மையிலேயே அவனை நினைத்து உருகுவாள், எனக்காக என்னவெல்லாம் செய்கிறான் என்று. ஆனால் திருமணம் முடிந்து காதலன் வேலைக்கு லீவ் போட்டுவிட்டு நான் உன்னோடு இருக்கிறேன் என்று சதா வீட்டிலேயே இருந்தால், காதலி கட்டாயம் எரிச்சல் அடைவாள், ஏனெனில் குடும்பம் என்பது பொருளாதாரம் சம்பத்தப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
காதல் என்பது கனவு மாளிகை,ஆனால் குடும்பம் என்பது கனவு அல்ல நிஜத்தோடு கூடிய ஒரு பயணம்.இங்கு உண்மை சூழலைப் பொருது தான் உணர்ச்சி செயல் பட வேண்டும்.
கண்ணில் தொடங்கும் காதல் காமத்தோடு முடிந்துவிடும் 
இதனைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை, உண்மைக் காதலை தொலைத்து விட்டு காமத்தை தேடும் காதல் கண்ணில் தொடங்கி காமத்தில் முடிந்து விடும் .
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். பெண்ணை தேர்ந்து எடுக்கும் போது இருபது வயது இளைஞன் போல செல்லாதே,அறுபது வயது கிழவனைப் போல செல் என்கிறது ஒரு பலமொழி.அழகு முக்கியம் தான், அழகுக்காக திருமணம் என்பது நன்றாக பெயிண்ட் அடிக்கப்பட்ட கல்லறையை வீடாக பயன் படுத்துவதை போன்றது.உன் காதலுக்கு உண்மையான அன்பை கொடு அது உனக்கு அழியாத ஆனந்தத்தைக் கொடுக்கும்.



2 comments:

  1. அழகுக்காக திருமணம் என்பது நன்றாக பெயிண்ட் அடிக்கப்பட்ட கல்லறையை வீடாக பயன் படுத்துவதை போன்றது.- superb lines

    ReplyDelete
  2. arumaiyana varigal nanba !yadharthamana paarvaiyil kadhalai anugi irukireergal! vazhthukkal!

    ReplyDelete