Saturday, 17 December 2011

குழந்தை தொலைந்து விட்டதா ?

நாம் செய்தி தாள்களில் அன்றாடம் படிக்கிறோம் ,எங்கோ எவரின் குழந்தையோ,மகனோ ,மகளோ, மனைவியோ,கணவனோ,தொலைந்து விட்டார்கள் என்று, அதைபடிக்கும் போது நாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை, நமக்கு நம் நாலு சுவர் தான் உலகம், அங்கு நடக்கும் நிகழ்வுகள் தான் நம்மை கண்ணீர் விட,கவலை கொள்ள செய்யுமே ஒலிய வெளியே எது நடந்தாலும் நம்மை பொறுத்த வரை அது ஒரு சம்பவம் . என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.
சுமார் 5 வருடங்களுக்கு முன்பு நான் அப்பொழுதான் yahoo messenger ல் அதிகமாக சாட் செய்து வந்த நேரம் .கண் தெரியாத குருடனை போல இருந்தது முதன் முதலில் சாட்டிர்க்குள் வரும் போது.நமக்கும் நாலு நண்பர்கள் கிடைக்க மாட்டார்களா என்று என்று இரவு பகலாக நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு
திரிந்த காலம் அது,அத்தி பூத்தது போல பெண்கள் சாட்ல வருவாங்க அந்த நேரம் பாத்து டைப்பிங் ஸ்பீடாக வராது,அதுக்காகவே பல பேர் பாய் சொல்லி இருக்கிறார்கள், அப்பெல்லாம் மனசு வலிக்கிற வலி இருக்கே ...அது சொன்னா தீராது சொல்லுக்குள்ள அடங்காது.
இது பத்தாதுன்னு நம்ம பசங்க வேற, ஒரு பொண்ணு சாட்ல வந்துட்டா அவங்க போடுற சண்ட இருக்கே ....(அதுக்கு) அலையிற நாய் போடுற சண்ட கூட பரவா இல்லை.இருந்தாலும் என்னங்க பண்றது என் கண்ண படைச்ச கடவுளு பொண்ண படைக்காம இருந்திருக்கணும் , இல்ல பொண்ண படச்சவன் கண்ண படைக்காம இருந்திருக்கணும்.இப்படியே ஒரு நாலு மாசம் போச்சு.

ஒரு நாள் மாலை நேரம் சாட் பண்ணிட்டு இருந்தேன்,எல்லா நாள் போலவும் இன்னைக்கும் சாட் பண்ணினது வேஸ்ட் என்று எண்ணிட்டு 4 .30  ஆக ஐந்து நிமிடம் இருந்ததால வேண்டா வெறுப்பாக சாட் பண்ணிட்டு இருந்தேன், திவ்யா cbe ன்னு ஒரு id கண்ணுல பட்டது,ஹாய்ன்னு சாட்ட நான் தான் ஆரம்பிச்சேன், அவளும் பதிலுக்கு ஹாய்ன்னு சொன்னா.நான் ஒரு கேள்வி கேட்டேன் அவ பதில் சொன்னா,மறுபடியும் நான் கேள்வி கேட்டேன் அதுக்கும் அவ பதில் சொன்னா,என்ன பத்தி அவ கேட்டா  நானும் பதில் சொன்னேன், உணமையிலேயே அந்த சாட்ல ஒரு கெமிஸ்ட்ரி இருந்தது.  அவ என்ன messenger list ல add பண்ணினா. நாளைக்கு சாட்க்கு வருவியான்னு கேட்டேன். 4 .30 க்கு வருவேன்னு சொன்னா .நாங்க பேசினத சுருக்கமா சொல்றேன். அவ பேரு உண்மையிலேயே திவ்யா தான், சொந்த ஊரு சேலம், அப்பா ஒரு டாக்டர்னு சொன்னா, கோவைல அவினாஷி லிங்கம் காலேஜ்ல இன்ஜினியரிங் படிக்கிறேன்னு சொன்னா.நான் என்ன பத்தி சொன்னேன்.நாளைக்கு கண்டிப்பா சாட்ல அவல வர சொன்னேன், அவளும் வரேன்னு சொன்னா .
என் வாழ் நாளுல மறு நாள் எப்ப வரும்னு எதிர்பாத்து காத்து இருந்தது அதுதான் முதல் டைம்.நைட் ரெம்ப எதிர் பார்போட போச்சு, மறுநாளும் வந்தது,நான் 3 மணிக்கெல்லாம் வந்தேன்  அவ 4 .30 மணிக்கு மேல தான் அவ சாட்ல வந்தா.மறுநாள் அவ வேறு யாரு கூடவும் சாட் பண்ணல, சாட் அவ்வளவு சுவாரஸ்யமா போச்சு, இப்படியே ஒரு வாரம் போச்சு.
                                
                                                                                     
அவளோட மொபைல் நம்பர நான் கேட்டேன், அவளும் அவ நம்பர தந்தா, கால் பண்ணவான்னு கேட்டேன் ,காலேஜ் ல இருக்கும் போதோ அவ லீவ்ல சேலம் போய் இருக்கும் போதோ கால் பண்ண வேண்டான்னு சொன்னா, நான் கண்டிப்பா உங்களுக்கு ப்ராப்ளம் வர மாதிரி நடக்க மாட்டேனு சொன்னேன் . அன்று இரவு அவளுக்கு கால் பண்ணினேன், அப்ப அவ வொர்கிங் வுமேன்ஸ் ஹாஸ்டல்ல இருந்தா நைட் நெறைய நேரம் பேசினோம்.எங்க ரெண்டு பேரோட உணர்வுகள் ஒன்னா இருந்ததால நேரம் போனதே தெரியல.இப்படியே ஒரு நாலு மாசம் போய் இருக்கும், நான் உன்னை பார்க்க வரலாமானு கேட்டேன், நான் கோயம்புத்தூர்ல இருக்கேன் நீ சென்னைல இருக்கேனு சொன்னா , நான் பரவா இல்லை நான் வரேன்னு சொன்னேன் , நான் சும்மா சொல்றேன்னு நெனசுகிட்டு வா பாக்கலாம்னு சொன்னா.
                                         
நான் அன்று இரவே கோவைக்கு சென்றேன், நான் போறது அவளுக்கு கூட 
சொல்லல .நான் போனா என்னை பார்க்க வருவாளா, இல்ல திட்டுவாலான்னு ஒரு பக்கம் பக்கு பக்குன்னு இருந்தது,எப்படியோ அதிகாலை 5  மணி சுமாருக்கு கோவை வந்துவிட்டேன்.சரியா ஆறு மணிக்கு அவளுக்கு கால் பண்ணி நான் கோவை வந்த விஷயத்தை சொன்னேன், காலேஜ் பஸ் 7 மணிக்கு வந்துடும் அதுக்குள்ள காந்திபுரம் வந்துட்டு திரும்ப முடியாது,சாயங்காலம் வரேன்னு சொன்னா,கால் பண்ணாத காலேஜ்ல இருப்பேன்னு சொன்னா.
நான் காலையில 10  மணிக்கு ஒரு படத்துக்கு போனேன். ஆனா அவளே 1  மணிக்கு கால் பண்ணி சாப்டியான்னு கேட்டா , ரெம்ப நேரம் பேசல, 4 .45 மணிக்கு மறுபடி அவ கால் பண்ணினா, நீ வரேன்னு சும்மா சொல்றேன்னு நெனச்சேன்னு சொன்னா, 7  மணிக்கு சாய்பாபா காலனில இருக்கிற பேம்பூ சூட் restaurant க்கு சொன்னா, நீ எப்படி இருப்பேன்னு கேட்டா  , மொபைல்ல கால் பண்றேன்னு சொன்னேன் .
                                
நான் ஆறு மணிக்கெல்லாம் ஆட்டோவுல அங்க போயிட்டேன், அவ வரேன் 
வரேன்ன  7 .30 மணிக்கு மேல தான் வந்த , நான் என்னையே நம்பல . அவ ஒரு ரோஸ் கலர் சுடில வந்து இருந்தா , அந்த நேரத்தை இன்னைக்கு கூட என்னால மறக்க முடியாது .ரெண்டு பெரும் சாப்பிட்டோம்,அவ ஒன்பது மணிக்குள்ள ஹாஸ்டல் போகனுன்னு சொன்னா அதனால ஒரு மணிநேரம் மட்டுமே அவ இருந்தா .நானும் அன்று இரவே சென்னை கெளம்பிட்டேன் , அந்த நாளுக்கு அப்பறம் நாங்க இன்னும் கொஞ்சம் திக் பிரண்ட்ஸ் ஆயிட்டோம் .அதுக்கப்பறம் நாங்க சாட்ல பேசுறதே இல்ல , எப்ப பேசனுன்னு நெனச்சாலும் மொபைல் தான் .
அவளுக்கு படிப்பு முடிஞ்சு சென்னைக்கே வொர்க் பண்ண வந்தா, அங்க ஒரு ஆறு மாதம் டிரைனியாக வேலை பார்த்ததால நெறைய லீவ் அவளுக்கு இல்ல, நைட் கொஞ்ச நேரம் தான் கால் பண்ணுவா, அந்த ஆறு மாதத்துல ஒரு தடவைதான் நாங்க சில்ரன்ஸ் பார்க் போனோம்.அதுக்கு அப்பறம் அவளுக்கு உடம்பு சரி இல்லாம சேலம் போய்ட்டா, அவ வீட்ல இருந்ததால அவளே எப்பவாவது கால் பண்ணுவா. இந்த நேரம் அந்த துயரமான ஒரு சம்பவம் என் வாழ்கையில நடந்தது.
பஸ்ல டிராவல் பண்ணும் போது என்னோட மொபைல் தொலஞ்சு போச்சு, அவளுக்கு போன் பண்ணவும் பயம் ,வேற யாரவது மொபைல்ல எடுத்துட்டா நான் மெயில் கூட பண்ணி பார்த்தேன், பதிலே இல்ல.ஒரு ரெண்டு மாசம் கழித்து நான் ஒரு STD ல மொபைல் போனுக்கு கால் பண்ணினேன், மொபைல் சுவிட்ச் ஆப்னு வந்தது.மறுபடி மறுபடி ஒரு நூறு தடவை யாவது பண்ணி இருப்பேன்.
இன்னைக்கும் அவல பார்க்க ஆசை ஆனா முடியல, காலேஜ்ல கூட அவ பத்தி டீடைல்ஸ் கேட்டேன், லேடீஸ் காலேஜ் டீடைல்ஸ் தர மறுத்து விட்டார்கள். அவ இப்ப இந்தியால இருக்காளோ இல்ல வெளிநாட்டுல இருக்களோ,ஆனா எங்கயோ இருக்கா, அவல ஒரு தடவ பாத்துட்டா போதும்.பேரு திவ்யா ,அப்பா டாக்டர் அவ பிரண்ட் பேர் ப்ரீதா திருச்சி இத தவிர வேறு  எதுவும் தெரியாது.
                               
நான் இன்னமும் அவல தேடுறேன், என்றாவது கிடைப்பாள் என்ற நம்பிக்கையில் 
ஒரு நான்கு வருட பழக்கம் ,அவல இன்னைக்கு நெனச்சாலும் என் கண்ணுல தண்ணி வரும் , இதுக்கே மனசு இவ்வளவு ரணமா இருக்குணா ஒரு குழந்தைய இழந்த தாய் எப்படி இருப்பாங்கனு என்பது ஜீரணிக்க முடியாத விஷயம்.இந்த மாதிரி காயத்துக்கு கடவுள தவிர யாரும் மருந்து போட முடியாது,காணாமல் போனவர்கள் பற்றிய செய்திய பார்க்கும் போதோ,கேக்கும் போதோ அவர்களுக்காக ஒரு நிமிடம் பிரே பண்ணுங்க ,காயப்பட்ட இதயத்துக்கும் கூட.

3 comments:

  1. //இந்த மாதிரி காயத்துக்கு கடவுள தவிர யாரும் மருந்து போட முடியாது//
    இந்த மாதிரி காரியத்த கடவுள தவிர யாரும் வேற யாரும் செய்ய முடியாது.

    ReplyDelete
  2. நெஞ்சை தொட்டு விட்டீர்கள்......பிரிவு...அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.....உணரத்தான் முடியும்.....

    ReplyDelete
  3. kandippa oru naal meet pannuveenga... Dont worry... varthigalil ungal vali purigirathu....

    ReplyDelete