Friday 23 December 2011

தாங்கிப் பிடித்தேன் அவள் தலையை

காலையில் இருந்து மாலை வரை
நானும் அவளைக் காண்கின்றேன்!
காதலை அவிளிடம் வெளிப்படுத்த
வார்த்தை இன்றித் தவிக்கின்றேன்!
அவளும் சென்று மறையும் வரை
அசையாமல் நான் நிற்கின்றேன்!
அவளோ சென்ற பின்னாலே
வார்த்தை வந்து தவிக்கின்றேன்!

எத்தனை நாள்கள் இப்படியே 
நித்தமும் நினைவிலே வாழுவதோ
அக்கரைச் சூரியன் மறையும் நேரம்
சக்கரை கூடப் பிடிக்கலையே!


எப்படியும் இன்று சொல்வதென
மனதைக் கல்லாய் மாற்றிக்கொண்டு 
அவளைத் தனியாய் அழைத்தேனே 
அவள் அருகில் நின்று நெளிந்தேனே!

என்ன சொல்லென்று முனுமுனுத்தாள்
நாளைக்கு என்று நான் நகர்ந்தேன்!
சட்டென எந்தன் கை பிடித்து -காதலா?
என்று எனைப் பார்த்தாள்
அதுதான் அன்பே என்றுரைத்தால்
அடிப்பாளோ அனைப்பாளோ
தெரியலயே?
இப்படியும் ஒரு பேரழகை
இறைவா ஏன்தான் நீ படைத்தாய்?
அவள் பிடித்த என் கரம் அதை
விலக்கிக்கொண்டு
ஓட ஒரு கால் எடுத்து வைத்து
உண்மைதான் என்றேன்
தைரியமாய்!
தலைதனைக் குனிந்தாள்
தாமரையாய்
கலங்கிய கண்ணீர்
தரையில் விழ
தாங்கிப் பிடித்தேன்
அவள் தலையை!
ஒரு வருடமாய் என்னிடம்
சொல்லிட முயன்றேன்
முடியலை என்றழுதாள்.






2 comments:

  1. unexpected end.. wow

    ஒரு வருடமாய் என்னிடம்
    சொல்லிட முயன்றேன்
    முடியலை என்றழுதாள்.

    ReplyDelete